இன்று ஜேர்மன் செல்லும் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) ஜேர்மனுக்கு செல்கிறார்.

ஜேர்மன் சான்சிலர் அஞ்சலா மார்க்கஸ் விடுத்த அழைப்பின் பேரில் செல்லும் அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மைத்திரிபால சிறிசேன மற்றும் அஞ்சலா மார்க்கஸ் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அன்றையதினம் விசேட வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்தநாட்டு ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சர் மற்றும் அந்த நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகளுடனும் மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 19ம் திகதி, தனது ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி, ஆஸ்த்திரியா நோக்கி பயணமாகவுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment